டோக்கியோவில் சிவப்பு எச்சரிக்கை!

 

ஜப்பான்  டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனாத்  தொற்றுப் பரவல் காரணமாக உயர்ந்தபட்ச எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை(Red Alert)  விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஆரம்பகாலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது கொரோனாவின்  2ஆம் அலையாக டோக்கியோவில் கடந்த ஒரு வாரத்துக்குள் புதிய பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த 4 நாள்களில்  200 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .

இந்நிலையில் குறித்த சிவப்பு எச்சரிக்கை  அறிவிப்பை அந் நாட்டு ஆளுநர் யுரிகோ கொய்கி நேற்று (Yuriko Koike) வெளியிட்டுள்ளார்.

Related posts