முல்லைத்தீவு முத்தையன்கட்டு வனப் பகுதியில் காணாமல்போன பல்கலைக் கழக மாணவர்கள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இன்று (16) காலை அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் (15) முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயிருந்தனர்.