அங்குலானவில் பதற்றம்!

 

அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றமான நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் கூடிய சிலர் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி இரவு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த அமித் கருணாரத்ன என்பவரின் கொலைக்கு காரணமாக சந்தேக நபர் கைதுசெய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது கொலைக்கு நீதி கோரியும் இந்த பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

Related posts