விண்வெளித் துறையில் உயர்ந்த  விருதைப் பெறும் சிவன்!

 

இஸ்ரோ எனப்படும்  இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு, விண்வெளித் துறையில் உயர்ந்த  விருதாக போற்றப்படும் ‘வோன் கார்மான்’ விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த  இவர் 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் விழாவில் திரு சிவன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் சர்வதேச வானியல் அகாடமி தெரிவித்திருக்கிறது.

Related posts