ரயில் மோதி வயோதிபர் ஒருவர் பலி!

 

யாழ்.சாவகச்சேரி நகரில் தனங்களப்பில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சடலம் அடையாளங் காணப்படாத நிலையில், கனேமுல்லை பகுதிக்குப் பயணிக்கவிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்பாணத்திலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த ரயிலுடனே குறித்த வயோதிபர் மோதுண்டுள்ளார்.

 

Related posts