மடிக்கணினியிலுள்ள கெமராவை மறைப்பதனால் மடிக்கணினி பாதிப்படையும்!

 

மடிக்கணினி  மற்றும் கைத் தொலைபேசியிலுள்ள கெமராக்களின்  மூலம் ஹக்கர்சினால் (hackers) பாவனையாளர்களின்  நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவதோடு தரவுகளை திருடமுடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதனை தவிர்க்க எம்மில் சிலர் குறித்த கெமராக்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கின்றனர்.

இந்நிலையில்,  இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த அப்பிள் நிறுவனம் மடிக்கணினி கெமராவை  மறைப்பதனால் அவற்றின் ஸ்கிரீன்  பாதிப்படையுமென  தெரிவித்துள்ளது.

குறிப்பாக அப்பிள் மெக்புக்  சிரீஸ் (Apple MacBook Series) மடிக்கணினிகளில்  கெமராவுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதனால் அதன் உள்புறத்திலுள்ள  டிஸ்ப்ளே(Display)  பாதிப்படையும் எனவும்  அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts