கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை!

 

கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு செயலணியுடன் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அதற்கு ஒரு உதாரணமாகும். அதனால் சமூதாய ரீதியாக இலகுவாக செய்யக்கூடிய பரிசோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவர்கள் குறிப்பிட்டார்.

முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் எந்த நேரமும் பின்பற்றப்பட வேண்டியவைகளாகும். காய்ச்சல், தொண்டைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அதுபற்றி புரிந்துகொண்டு சமூகத்தில் சேர்ந்து வாழாது தனித்திருந்து நோய்த் தொற்று ஒழிப்புக்கு பங்களிக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

Related posts