விசேட சுற்றிவளைபில் 331 சந்தேக நபர்கள் கைது!

 

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) பிற்பகல் 06 மணிமுதல் இன்று (14) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் அதிகளவான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 135ஆகும்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 92 பேரும் கஞ்சா வைத்திருந்த 72 பேரும் கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts