சீனாவுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்க டிக் டொக் நிறுவனம் திட்டம்!

டிக்டொக்  உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அண்மையில் இந்தியா  தடை விதித்திருந்த நிலையில்,  தற்போது அமெரிக்காவும் டிக்டொக்கை தடை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டிக்டொக் செயலியின் தாய்நிறுவனமான பைட்டான்ஸ் ByteDance நிறுவனம், சீனாவுடனான தனது தொடர்பை துண்டிக்க திட்டமிட்டுள்ளது.

பீஜிங்கில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள அந்நிறுவனமானது, சீனாவுக்கு வெளியே லண்டன், லாஸ் ஏஞ்சலெஸ், நியூயார்க், மும்பை, டப்லின் ஆகிய நகரங்களிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில்  சீனாவிலிருந்து வெளியேறி குறித்த  5 நகரங்களில் ஏதேனுமொன்றில் அந் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related posts