கண்டியில் மேலும் இருவருக்கு கொரோனா!

 

கண்டியில் குண்டசாலைப் பகுதியில் 2 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரும் கண்டி குண்டசாலை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளருடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதுடன், 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts