உலக நாடுகள் சுகாதார நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டால் கொரோனாப் பாதிப்பு மேலும் மோசமாகும்

உலக நாடுகள் சுகாதார நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டால் கொரோனாப் பாதிப்பு மேலும் மோசமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனாம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனாவுக்கு எதிரான போரில் பல நாடுகள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.

பல தலைவர்களின் கருத்துக்கள் கொரோனாவை குறைத்து மதிப்பிடச் செய்யும் வகையில் உள்ளன. ஆகவே தடுப்பு மருந்துகள்  கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு அரசும், அதிகாரிகளும், தனி நபரும் தங்கள் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினால் கொரோனா வைரஸிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மேலும் இவ்வாண்டின்  இறுதியில் 13 கோடி மக்கள் பாதிக்கப்படக்கூடும்  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts