அழைப்பு வந்தால் மீண்டும் களமிறங்கத் தயார் – உசேன் போல்ட்

 

உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட், முன்னாள் பயிற்சியாளர் க்ளென் மில்ஸ் அழைத்தால் போட்டிகளில்  மீண்டும் களமிறங்குவதற்கு தயார் என பத்திரிகை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த உசேன் போல்ட், எனது பயற்சியாளர் திரும்பி வந்து இதை செய்யலாம் (மறுபிரவேசம்) என்று சொன்னால் அதற்கு நான் தயாராகவுள்ளேன். ஏனெனில் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

ஆகவே அவர் அழைத்தால் மீண்டும் களமிறங்கத் தயார் என்றார்.

2017 ஆம் ஆண்டு ஓய்வினை அறிவித்த உசேன் போல்ட், எட்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளதுடன் உலக தடகளத்தில் 11 முறை சம்பியன் ஆகியுள்ளார்.

அதேநேரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.

Related posts