அரசியல் விளம்பரங்களைத் தடை செய்யுமா பேஸ்புக்?

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக்கு மத்தியில்  இவ் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து இத் தேர்தலுக்கான பிரசார நடிவடிக்கையில் ஒன்லைன் பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக  பேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு (Political Ads) தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.

எனினும் இது குறித்து அந் நிறுவனம் எந்த வித அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை.

இதற்கு முன்னரும் பல்வேறு நாடுகளில் நடந்த தேர்தல்களில் ஒரு தலைபட்சமாக செயற்பட்டதாகப் பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைதளங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts