சமூக பரவலாக மாறும் கொரோனா தொற்று – வைத்தியர் எச்சரிக்கை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் ஒரு சில தொடர்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் சுமத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா வைரஸ் சமூக பரவலாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு நிலையத்தில் பிள்ளைகளை பார்க்க வந்த பெற்றோர், விடுமுறைக்கு சென்று வந்த பெற்றோர் மற்றும் விடுமுறைக்கு சென்ற அதிகாரிகளினால் இந்த ரைஸ் சமூக பரவலாக கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இதுவரையில் நோயாளிகளை அடையாளம் காணுவதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் ஆபத்துக்கள் அதிகம் கொண்ட பிரதேசங்களை மூடி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts