முகக் கவசம் அணிவது கட்டாயம்; மீறினால் சட்ட நடவடிக்கை

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் போகும் வரையில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படும் என்பதுடன் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிராந்திய நாடுகளில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts