பொறுப்புக்கூறல் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள பிரித்தானியா!

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் பிரித்தானியா கேள்வி எழுப்பியுள்ளது.

பிரித்தானிய பொதுநலவாயத்துறை அமைச்சர் அஹ்மட் பிரபு இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவரத்தனவுடன் இடம்பெற்ற காணொளி மாநாட்டின்போதே இந்த கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியாவின் இந்தக் கேள்விக்கு இலங்கைய அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

எனினும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விடயத்தில் ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரித்தானிய அமைச்சருடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts