இலங்கையில் மீண்டும் மஞ்சளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் மீண்டும் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஞ்சள் இறக்குமதி வரையறுக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தற்போது வர்த்தகர்கள் சிலர் கட்டுப்பாட்டு விலையை மீறி மஞ்சளை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா பரவலை அடுத்து கடந்த மாதங்களில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் விலை 3000 ரூபாயை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts