யாழைச் சேர்ந்த புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் தற்கொலை!

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், வடமராச்சி, கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரான கே.கமலராஜ் என்பவராவார்.

தற்கொலைக்கான காரணம் தெரியாவராத நிலையில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts