வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts