பொலிகண்டி கிழக்கு கிராமத்தில் அபிவிருத்தி திட்டத்தில் ஈடுபடுவதற்காக கிராமத்தில் புதிதாக ஒரு அமைப்பு நிறுவப்பட உள்ளது. இவ் அமைப்பின் தலைமைச் செயலகம் ஊரிலும் கிளைகள் எமது ஊரின் உறவுகள் வாழ்கின்ற ஒவ்வொரு நாடுகளிலும் தனித் தனியாக நிறுவப்பட உள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 19-06-2020 மாலை 4 மணியளவில் பொலிகண்டி மக்கள் படிப்பகத்தில் பொலிகண்டி கிழக்குக்கான புதிய தலைமைச் செயலகம் உதயமாக இருக்கின்றது.
தலைமை செயலகத்தின் தாய் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பிற்பாடு ஒவ்வொரு நாடுகளிலும் கிளை நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.