பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதி

பொலிகண்டி கிழக்கு மக்கள் படிப்பக முன்பள்ளிக்கு நிரந்தர வைப்பு நிதியாக முப்பத்தியிரண்டு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

நிலத்திலும் புலத்திலும் வாழும் மக்கள் முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள்,அன்பர்கள், ஊர்மக்கள், என அனைவராலும் வழங்கப்பட்ட இந் நிதியானது 08-06-2020 அன்று இலங்கை வங்கியின் நெல்லியடிக் கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந் நிதி முதலை எக்காரணம் கொண்டும் மீள பெற முடியாது. இது நம்பிக்கைச் சொத்தாக சட்டவாளர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிதியால் பெறப்படுகின்ற வட்டியானது முன்பள்ளியின் செலவீனங்களுக்காக பயன்படுத்த முடியும்.

Related posts