சுயகற்றல் செயலட்டைகள் வழங்கிவைப்பு

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா இடர் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும்மூடப்பட்ள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாணவரின் கற்றல்செயற்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் இணையத்திலும் முகப்புத்தகங்களிலும் மென்பிரதிகளாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்த சுயகற்றல் செயலட்டைகள், பயிற்சிப்பள்ளி பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புகள் என்பன தரவிறக்கம் செய்யப்பட்டு வன்பிரதிகளாக”ஐங்கரங்கள்” என்ற பெயரில் ௹115000/- பெறுமதியான கற்றல் கையேடுகள் தரம் 01-தரம்11 வரை யா/பொலிகண்டி இ த க பாடசாலையில் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பொலிகண்டி கிழக்கு, மேற்குகில் வதியும் ஏனைய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

இதற்குரிய நிதியை முழுமைன நிதி சுவிஸ் நாட்டில் வசிப்பவரான செல்வன் ஐங்கரன திபீசன் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.

Related posts