தென்கொரியாவுக்கான தொடர்புகளை துண்டித்த வடகொரியா

இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான அவசர தொலைபேசி இணைப்பு உட்பட, தென்கொரியாவுக்கான அனைத்து தொடர்பு இணைப்புகளையும் துண்டித்து விட்டதாக வட கொரியா அறிவித்துள்ளது.

எனினும் காரணம் எதனையும் அந்த நாடு குறித்துக் காட்டவில்லை. இந்தநிலையில் தென் கொரியாவை “எதிரி” என்று வர்ணிக்கும் தொடர் நடவடிக்கைகளில் இதுவே முதல் நடவடிக்கை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இதன்படி வட கொரிய எல்லை நகரமான கேசோங்கில் அமைந்துள்ள ஒரு தொடர்பு அலுவலகத்திற்கு செய்யப்பட்டுள்ள தினசரி அழைப்புகள் இன்றுடன் நிறுத்தப்படுகின்றன.

2018ல் இரண்டு கொரியாக்களும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பதற்றத்தை குறைக்கும்வகையில் இந்த அலுவலகத்தை அமைத்திருந்தன.

இதேவேளை 1953 இல் கொரியப் போர் முடிவடைந்தபோதும் இதுவரை எந்தவொரு சமாதான உடன்பாடும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவில்லை

எனவே வடகொரியாவும் தென் கொரியாவும் இன்னும் போர் மனப்பான்மையிலேயே இருந்து வருகின்றன.

Related posts